அசுவினி:-
இதில் சந்திரன் ஜெனன காலத்தில் இருக்க பிறந்தவன் அழகுள்ளவள் ஆபரணங்களின் மேல் ஆசை உடையவன் பத்தி கூர்மை உள்ளவன் காரிய சமர்த்தன் சகல ஜனப்பிரியன். தனமுடையவன் அடக்கம் உடையவன் செத்தி உடையவன் சுகமாக வாழ்பவன்.
பரணி:-
உண்மையை பேசுபவன். நோயற்றவன். துக்கமற்றவன். காரியங்களை பூர்த்தி செய்து முடிப்பவன், அங்கவீளன். தனமுடையவன். நன்றி இல்லாதவன். கெட்டவன் பிறருடைய மனைவி மேல் காதல் உடையவன். .
கார்த்திகை:-
நாடெங்கும் புகழ் உடையவன். அழகுள்ளவன். ஆகாரம். அதிகமாய் புசிக்க விருப்பமுள்ளவன். பிறருடைய மனைவி மேல் காதல் உடையவன். வலிவுள்ளவன். புத்தி கூர்மையுள்ளவன். கம்பீரமாக இருப்பான். மிகவும் உபயோகமுள்ள வித்தை அறிந்தவன்.
ரோகினி:-
அழகுள்ளவள். சீலமாயிருப்பவன். உண்மையை பேசுவான். நயமான பேச்சு உடையவன். பிறருடைய சொத்தில் ஆசை இல்லாதவன். நிலையான அபிப்ராயமுடையவன் புத்தி உள்ளவன். பிறருடைய குற்றங்களையும், குறைகளையும் அறிந்தவன். மெலிந்த தேகமுடையவன். பரஸ்திரிகளிடத்தில் விசுவாசம் உள்ளவன்,
மிருகசிரீடம்:-
சுறுசுறுப்பும் சாமார்த்தியமும், பயமும், தனமும் உடையவன். காமக்ரீடையில் இச்சையுள்ளவன். இள மனது உடையவன். தேச சஞ்சாரி, கருடபார்வை உடையவன்.
திருவாதிரை:-
செய்த நன்றியை மறப்பவன். இம்சையையும். பாபத்தையும் விளைவிக்கக் கூடிய கெட்ட காரியங்களைச் செய்ய விருப்பம் உள்ளவன். தரித்திரன், பலசாலி. இழிவான காரியங்களில் ஈடுபடுவாள்.
புனர்பூசம்:-
கைமும், தெய்வபக்தியும், சாந்தமான குணமும், நல்ல சுபாவமும் உள்ளவன். நோயாளி, அல்ப வஸ்துக்களாலே திருப்தி அடையக்கூடியவன். தனவந்தன். கீர்த்தியும், வித்தையும். உள்ளவன். காமம் அதிகமுடையவன்.
பூசம்:-
தனவந்தன். தானதருமம் செய்பவன். சாஸ்திர ஆராய்ச்சி உள்ளவன். எல்லாராலும் விரும்பபடுவான். தன்னுடைய பந்சேந்திரியங்களை அடக்கி வாழ்பவன், தெய்வங்களின் பேரிலும் பிராமணர்கள் பேரிலும் அன்பு உள்ளவன். தனமும், புத்தி கூர்மையும் உடையவன். பந்துக்கள் அதிகமாக உள்ளவன். அரசர்களுடைய அபிமான உள்ளவன்.
ஆயில்யம்:-
பிறருடைய காரியங்களை கவனிக்க மாட்டான். சர்வபட்சனரி பாபி. செய்நன்றி மறப்பவன். பிறரை ஏமாற்றி மோசம் செய்வதில் வல்லவன், முன்கோபி. கெட்ட நடவடிக்கை உடையவன்.-
மகம்:-
தளவந்தன், சுகவான. தேவர்களையும் பிதுர்க்களையும் தொழுவான். அனேசு சேவர்களையுடையவன், கம்பீரமாயும், சத்காரியங்களில் ஆசைவுடையவனாகவும் தன் மனைவிஇடத்தில் இரக்கம் உள்ளவனாவன்
பூரம்:-
அழகுள்ளவனாயும்.அரசர்களிடத்தில் உத்தியோகம்
செய்பவனாயும், தான-தருமம் செய்வதில் தயாளமுள்ளவளாகவும், நயமான வார்த்தை உடையவனாகவும், தேகசஞ்சாரிஆகவும் இருப்பான் வலிவுள்ள ஸ்திரீகள் மேல் அதிக ஆசை உள்ளவும்
உத்திரம்:-
தன்னுடைய வித்தையினால் தனம் தேடுபவளாகவும் சுகமாய் ஜீவிப்பவனாகவும் இருப்பாள். எல்லோராலும் விரும்பத் கூடியவன். கம்பீரமாயும் செய்நன்றி பாராட்டுபவளாகவும்,புத்தி கூர்மை உள்ளவனாயும் அதிக இன்ப சுகங்களை அனுபவிக்க ஆசை உள்ளவன்.
அஸ்தம்:-
சுறுசுறுப்பாகவும், தந்திரவாதியாகவும், ஜீவகாருண்யமில்லா தவனாகவும், திருடனாகவும், கள் முதலிய மதுபானங்களை குடிப்பவனாகவும் மானத்தைப்பற்றி கவலைப்படாதவனாகவும் இருப்பாள் : தனவந்தனாகவும் ஞானிகளின் சினேகத்தை விரும்புவான்.
சித்திரை:-
அழகான கண்களும், அவயமும் உடையவன். அளேக விதமான நிறமுடைய ஆடைகளையும், புஷ்பங்களையும் அணிந்து கொள்வான், ஜாக்கிரதையாகவும் நல்ல சுபாவமுடையவளாகவும் பிறருடைய மனைவி பேரில் இச்சை உடையவனாக இருந்த போதிலும் மிகவும் பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
சுவாதி:-
சாந்தமான சுபாவம் உடையவன். தானதருமஞ்செய்ய எண்ணம் உள்ளவள். இரக்கமும், நயமான வார்த்தை உடையவன். வியாபாரத்தில் வல்லவன். பஞ்சேந்திரியங்களை அடக்கி ஆள்பவள். தெய்வங்களையும், பிராமணர்களையும் திருப்தி செய்யக் கூடியவள். அதிக தனமும் கொஞ்சம் புத்தியையும் உடையன். சுகபோகங்களை அடைய விரும்புபவன்.
விசாகம்:-
பிரருடைய ஐஸ்வர்யத்தைக் கண்டு பொறாமைப் படுவான். கலகப்பிரியன் முன்கோபி. எதிரிகளை வெல்லும் திறமை யுள்ளவள். மனைவியிடத்தில் அதிக அளவு ஆசை உள்ளவன்.
அனுஷம்:
தனவந்தன். அன்னிய தேசத்தில் வசிப்பான். தேச சஞ்சாரி. பசியை பொறுக்க முடியாதவன், பராக்கிரமம், கீர்த்தி. புகழ். மதுரவாக்கு, தனம் இவைகளை உடையவள். சுகத்தை தேடுபவன்.
கேட்டை:-
முன்கோபி. சந்தோசமாகவும் நற்குணங்கள் உடையவனாக இருப்பான். கொஞ்சம் சினேகிதர் உடையவன். நியாயஸ்தனாகவும், பெருந்தன்மை உடையவளாகவும் பிறகுடைய ஸ்திரீகளிடத்தில் ஆசை உள்ளவனாகவும் இருப்பான்.
மூலம்:-
தனவந்தன். சுகபோகங்களை அனுபவிப்பவன். கர்வம் உள்ளவள். பிறருக்கு தீங்கு நினையாதவன். நிலையான புத்தி உள்ளவன். விரைவாக பேச வல்லவன்.
பூராடம்:
சினேகிதரிடத்தில் பிரியம் உள்ளவன். மனதிற்கு உகந்த நல்ல மனைவி உடையவள். கர்வம் உள்ளவன். பொறுமையும், சாந்தமும் உள்ளவன். சுகவான். நல்ல நடவடிக்கை உடையவன். தன் மானத்தின் மேல் அதிக நோக்கமுள்ளவன்.
உத்திராடம்:-
நற்குணங்களும், சன்மார்க்கமும் உடையவள். நன்றி பாராட்டுபவன். அளேக சிநோகிதர் உடையவள். எல்லோராலும் விரும்பப்பட்டவன், சாந்தமான குணமுடையவள். சந்தோஷ முடையவன். தனமும் வித்தையும் உடையவன்.
திருவோணம்:-
தளமும்,புகழும் உடையவன், தயாளமும், தானதர்ம சிந்தனையுள்ள மனைவி உடையவன். எப்போதும் விருத்தியடை பவன் தேசத்தை அரசாளும் வம்சத்தைச் சார்ந்தவன் ய்ங் களையும், பிராமணர்களையும் தொழுபவன் தெய்வ பக்தி உள்ள வள்,
அவிட்டம்:-
தனவந்தன், பராக்கிரமம் உள்ளவன், சங்கீதப்பிரியன் தனத்தை வெகு ஜாக்கிரதையாக சேர்ப்பவனாக இருந்தாலும் தானதருமம் செய்பவன் தொடைகளும். கழுத்தும் பருமனாக இருக்கும். தேகம் உடையவன் சந்தோஷமாயும், சீக்கிரத்தில் எதையும் நம்பக்கூடியவளாக இருப்பான்.
சதயம்:-
கடினமான வார்த்தை உடையவன். யாரையும் மதியான, எதிரிகளை வெல்லுவான். தீர்க்கமாய் யோசியாமல் காரியங்களைச் செய்வாள். துக்கமுடையவன். மெய்பேசுபவன் ஜோதிடவித்தை தெரிந்தவன் தைரியவான். மிதமாகப்புசிப்பவன் சாந்தமான குணமுடையவன்.
பூராட்டாதி:-
லோபி,தெளிவான வார்த்தையுடையவன் தான்தேடும் தனத்தை தன் மனைவியிடம் கொடுப்பவன். துக்கமுடையவள். மெலிந்த தேகமுடையவன், தைரியமாகப் பேசுவான். கலகலப்பிரியன்.
உத்திரட்டாதி:-
நற்துணங்களுடையவன். சுகமுள்ளவன். எதிரிகளை வெல்வானனன். திறமையாகப் பேச வல்லவன். புத்திர சம்பத்து
உடையவன். தனமும் வித்தையும் உடையவன். தயாள, குணமுடையவன். சாந்தமான சுபாவம் உடையவன்.
ரேவதி:-
தனவந்தன், பராக்கிரகமுள்ளவள். பிறருடைய சொத்தில் இச்சை இல்லாதவன். எல்லோராலும் விரும்பப்பட்டவன், அங்கவீனம் இல்லாதவன். எப்போதும் சுகபோகங்களை
அனுபவிப்பாள். சூட்சுமான புத்தி உடையவன். காமம் அதிகம் உடையவள். சினேகிதர்களும். புத்திரர்களும் உடையவன். தேகத்தில் ஒரு அகலமான தழும்பு உடையவன்.
குறிப்பு:- மேற்சொல்லிய நட்சத்திர பலன்கள் எல்லாம் சந்திரனை மாத்திரம் அனுசரித்து சொல்லி இருப்பதால் சந்திரன் வலிவாக இருந்தால் தான் இப்பலன்கள் பூரணமாக நடக்கும். மேலும் மற்றக் கிரகங்களுடைய பலன்களையும் சேர்த்து யூகித்து சொல்ல வேண்டும்.