மேஷம், விருச்சக செவ்வாய் :-
இவற்றில் செவ்வாய இருக்கப் பிறந்தவன் தனவந்தன் சுகபோகங்களை அனுபவிப்பான். தேகத்தில் காயம்பட்டு வடிவுகள் உண்டு. வர்த்தகனாக (அ) சேனாதிபதியாக இருப்பான் அலைச்சல் உடையவன். அரசரால் நன்கு மதிக்கப்பட்டவன். அரசனிடமிருந்தும் பயிர்த்தொழில் மூலமாகவும் தனம் தேடுவான்.
ரிஷப, துலா செவ்வாய்:-
இவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவன் கடினமான தேகமுடையவன் ஸ்திரீகளுக்கு அடங்கி நடப்பவன். பிறருடைய மனைவியின் மேல் இச்சை உடையவன். மந்திர-தந்திரம் தெரிந்தவன். பயங்காளி, சிளேகிதர்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான்.
மிதுன, கன்னி செவ்வாய்:-
இவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவன், அழகுள்ளவன், பயமில்லாதவன், சங்கீதம், யுத்தத்தில் வல்லவன். லோபி, பிறருக்கு உதவி செய்வான். புத்திரர்களுடையவன். சினேகிதர் இல்லாதவன், யாவரையும் கொஞ்சிக் கேட்கும் தன்மையுடையவன்.
கடக செவ்வாய்:-
இதில் செவ்வாய் இருக்கப் பிறந்தவன் சுங்கவீனன், தனவந்தன். பாபி. புத்தி கூர்மையுள்ளவன். கடலைக் கடந்து திரவியம் தேடுவான். அரசனுக்கு அந்தரங்க சினேகிதரன் ஆவான்,
சிம்ம செவ்வாய்:-
செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவன் தரித்திரன். தீரமுடையவன். இம்சையை சகிக்கக் கூடியவன், காடுகளில் சஞ்சாரம் செய்பவன். மனைவி, மக்கள் அற்பம் உள்ளவன்.
தனுசு, மீன செவ்வாய்:-
இவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவன், அதிக புகழ் உடையவன். தீரன். மந்திரியாக இருப்பான். அனேக விரோதிகள் உடையவன். அற்ப புத்திரர் உடையவன். சுகபோகங்களை அனுபவிப்பான். விரோதிகளை ஜெயிப்பவன். ம
மகர செவ்வாய்:-
இதில் செவ்வாய் இருக்கப் பிறந்தவன் மிகவும் தனவந்தன், அர்சன் அவனுக்கு அரசனுக்கு சமமானவன். அனேக புத்திரர் உள்ளவன்.
கும்ப செவ்வாய்
செவ்வாய் கும்பத்தில் இருக்கப் பிறந்தவன் தரித்திரன் பொய்யான்: பாபி தேசசஞ்சாரி. துக்கமுடையவன்.