மேஷ சூரியன்:-
ஜெனன காலத்தில் சூரியன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவன். கொஞ்சம் தனமுடையவனாகவும், அதிக புகழுடைய வனாகவும், சதா அலைச்சல் உடையவனாகவும், ஆயுதங்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவனாகவும். பரம உச்ச பாகையில் இருந்தால் மேற்சொல்லிய பலன்களில் கெட்ட பலன்கள் இல்லாமலும் நல்ல பலன்கள் அதிகமாகவும் இருக்கும்.
ரிஷப சூரியன்:-
சூரியன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவன் வஸ்திரம், வாசனைத் திரவியங்கள் முதலியவைகள் வர்த்தகம் செய்பவள். சங்கீதம், வாத்தியம் இவைகளில் வல்லவன்.
மிதுன சூரியன்:-
சூரியன், மிதுனத்தில் இருக்கப் பிறந்தவன் தனவான். ஜோதிடம், வேறுகல்வி, இலக்கணம் இவைகளை அறிந்தவன். தனம், நானம் இவைகளை அடைவதற்காக எப்போதும் கவலையுள்ளவனாக இருப்பான்.
கடக சூரியன்:-
சூரியன் கடகத்தில் இருக்கப் பிறந்தவன் தரித்திரன், பயங்கரமாகவும், யாருக்கும் அடங்காதவனாகவும், பிறருக்காக வேலையை செய்பவனாகவும், வழி நடந்தால் இளைப்படைவளாகவும் இருப்பான். புத்தி இல்லாதவன்,
சிம்ம சூரியன்:-
சிம்மத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் பராக்கிரமம் உள்ளவன். மடையன். மலைகளிலும், காடுகளிலும், பசுத்தொழுவங் களிலும் வசிக்கப்பிரியமுள்ளவன்.
கன்னி சூரியன்:-
சூரியன் கன்னியில் இருக்கப் பிறந்தவன் தேகம் ஸ்திரீயின் தேகத்தைப் போல இருக்கும். கணித வித்தையிலும், கல்வியிலும், சித்திரம் எழுதுவதிலும் உலக அனுபோகத்திலும் வல்லவனாக இருப்பான். தனம் தேடுவதில் ஆசையுள்ளவன்.
துலா சூரியன்:-
சூரியன் துலாத்தில் இருக்கப் பிறந்தவன் பாவக்காரியங்களை செய்வான். அலைந்தபடி இருப்பான். மதுபானங்களின் மேல் ஆசையுள்ளவனாகவும், மதுபான வியாபாரம் செய்பவனாயும் இருப்பான். தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களை மாற்றும் ரசாயாண சாஸ்திர விதியாக இருப்பான். தைரியவான்.
விருச்சக சூரியன்:-
சூரியன் விருச்சகத்தில் இருக்கப் பிறந்தவன் மூர்க்கன். கெட்ட சுபாவம் உடையவன். ஆலோசனையில்லாமல் காரியங்களை செய்வான். தான் தேடும் தனம் தனக்கு உதவாது. ஆயுதங்களை உபயோகம் செய்வதில் வல்லவனாக இருப்பான்.
தனுசு சூரியன்:-
சூரியன் தனுசில் இருக்கப் பிறந்தவன் தனவந்தன். யோகிகளாலும் கூட நன்கு மதிக்கப்பட்டவன், சிற்பம், வைத்தியம் முதலிய சாஸ்திரங்களை அறிந்தவன். சிறிய வர்த்தகன்.
மகரசூரியன்:
சூரியன் மகரத்தில் இருக்கப் பிறந்தவன் கொஞ்சம் தனத உடையவன். புத்தியில்லாதவன். தன் அந்தஸ்திரத்திற்கு தாழ்ந்தகாரியங்களை செய்வான். 'பேராசையுடையவளாகவும் பிறச்சொத்துக்களை அனுபவிப்பலளாகவும் இருப்பான்.
கும்ப சூரியன்:-
சூரியன் கும்பத்தில் இருக்கப் பிறந்தவன் தரித்திரன். சொத்து இல்லாதவன். பிள்ளைகள் இல்லாதவன், தன்குலத்திற்கு தகாத காரியங்களை செய்வான். புத்திர பௌத்திர சுகம் இல்லாதவன்.
மீன சூரியன்:-
சூரியன் மீனத்தில் இருக்கப் பிறந்தவன் ஜலத்தில் அல்லது வடிவு உண்டாகக்கூடிய வஸ்துக்களாகிய உப்பு, மச்சம், முத்து, சிப்பி, பவழம், சங்கு முதலிய ஜலவஸ்துக்களில் வியாபாரம் செய்வான். பயிர் தொழிலும் செய்வான்.