குளிகன் எனும் மாந்தியின் உச்ச வீடு தனுசு ஆகும். அது மிதுனத்தில் நீசம் அடைகிறது. கன்னியும். மகரமும் சொந்த ஆட்சி வீடுகளாகும். சில மூல நூல்கள் குளிகனுக்கு மேஷம் உச்சமாகவும் துலாம் நீசமாகவும் கூறுகின்றன. சிம்மம், கும்பம். மீனம் போன்ற வீடுகள் பகை ஆகும்.
கடகம், விருச்சகம் போன்றவை நட்பு வீடுகள் ஆகும். குளிகனுக்கு சுக்கிரன் நட்பு கிரகம் ஆகும். வியாழன், புதன், சனி போன்றவை சமக் கிரகங்களாகும். சந்திரனும், செவ்வாயும் பகை கிரகங்கள் ஆகும். குளிகனுக்கு 2. 12ஆம் பார்வைகள் உண்டு. இயற்கையில் குளிகன் பாபகிரகம் ஆகும்.
ஜாதகத்தில் புதனும், சூரியனும் அமைதல் மேஷம், ரிஷபம், கும்பம், மீனம் இவற்றில் சூரியனும் புதனும் சேர்ந்து நடப்பார்கள்.
மிதுனம், கடகம், சிம்மம், கன்னி இவற்றில் புதன் சூரியனுக்கு முன்னே செல்வார். துலாம். விருச்சகம், தனுசு, மகரம் இவற்றில் புதன் சூரியனின் பின்னே செல்வார்.