சுப காரியங்களை நீக்க வேண்டிய இராகு காலம் ஆனது ஒரு நாளில் பகலில் 1/2 மணி நேரம் வருகிறது. இதற்கென்று பஞ்சாங்கத்தில் ஒரு அட்டவணை போடப்பட்டு உள்ளது. முதலில் அதைக் காண்போம்.
காலை 06 மணியில் இருந்து 071/2 மணி வரையான முகூர்த்தத்தில் இராகு காலம் வருவதே இல்லை. காலை 07/2 மணி முதல் மாலை 06 மணி வரையில் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் தினசரி 01/2 மணி நேரம் இராகு காலம் வரும்.
இந்த இராகு காலத்தில் சுபகாரியங்கள் நீக்குவதற்கும், துர்க்கை வழிபாடு செய்வதற்கும் இராகுகால நேரங்களை நினைவில் நிறுத்த ஒரு வழி உள்ளது. அதைப் பற்றி காண்போம். முதலில் கீழ்க்கண்ட வாக்கியத்தை படித்து நினைவில் கொள்ளுங்கள்.
கிழமை | மணி முதல் | மணி வரை
ஞாயிறு | 04.30 | 06.00
திங்கள் | 07.30 09.00
செவ்வாய் | 03.00 04.30
புதன் | 12.00 01.30
வியாழன் | 01.30 03.00
வெள்ளி | 10.30 12,00
சனி 09.00 10.30