இராசியில் புதன் அமர்ந்த இருந்தால் தரும் பலன்கள் Benefits if Budha is placed in the zodiac
மேஷம், விருச்சக புதன்:-
இவற்றில் புதன் இருக்கப் பிறந்தவன் தரித்திரன், வேத சாஸ்திர விரோதி, தெய்வம் இல்லை என்று வாதிக்கும் நாஸ்திகள்: திருடன் கள்ளங்கபடு உள்ளவன். பொய் பேசுவான். சன்மார்க்க வழியை விட்டு நடப்பவன். சூதாடுபவன். மதுபானம் செய்பவன். கடலில் மூழ்கினவன்.
ரிஷய, துலா புதன்:-
இவற்றில் புதன் இருக்கப் பிறந்தவன் எப்பொழுதும் திரவியம் தேட முயற்சிப்பவன் தானதருமம் செய்வதில் தியானம் உடையவன். உபதேசம் செய்பவன். குரு, மாதா, பிதா இவர்களிடத்தில் பக்தி விசுவாசம் உடையவன்.
மிதுன புதன்:-
மிதுனத்தில் புதன் இருக்கப் பிறந்தவன் சாஸ்திரங்கள், சங்கீதம், நர்த்தனம், சித்திரம் எழுதுதல் இவற்றில் வல்லவன், நயமாகப் பேசுவான். சுகமாக வாழ்வான்.
கடக புதன்:-
கடகத்தில் புதன் இருக்கப் பிறந்தவன். ஜசைம்பந்தமான வஸ்துக்களால் தனம் தேடுவான். பந்துக்களால் வெறுக்கப்பட்டவன்.
சிம்ம புதன்:-
சிம்மத்தில் புதன் இருக்கப் பிறந்தவன். தரித்திரன், மூடன், தேசசஞ்சாரி சுகமும், புத்திரமும் இல்லாதவன். ஸ்திரீகளின் மேல் ஆசையுள்ளவன். ஆனால் ஸ்திரிகள் அவனை விரும்ப மாட்டார்கள். மனைவியிடத்தில் பயந்து அடங்கி நடுங்கி இருப்பான்.
கன்னி புதன்:-
கன்னியில் புதன் இருக்கப் பிறந்தவன், தீரம் உள்ளவன். புத்தி கூர்மையுள்ளவன். எல்லாவித நற்குணமுடையவன். சாந்தமாயிருப்பான். கல்விமான், தானதருமம் செய்யும் தயாள குணமுடையவன். சுகபோகங்களை அனுபலிப்பான்.
தனுசு புதன்:-
புதன் தனுகவில் இருக்கப் பிறந்தவன் பலவித சாஸ்திரங்களிலும் நீதி சாஸ்திரத்திலும் வல்லவளாகி அரசர்களால் மேன்மைப் படுத்தப்பட்டவனாக இருப்பான். அரசனுக்கு அந்தரங்க சினேகிதராக இருப்பான்.
மகர கும்ப புதன்:-
இவற்றில் புதன் இருக்கப் பிறந்தவன் தரித்திரன், கடன் வாங்குபவன். சிற்ப வேலை செய்பவன். பிறருக்கு வீணாக வேலை செய்பவன். கைத்தொழில் செய்பவன். பிறருடைய வேலைக்காரன்.
மீன புதன்:-
புதன் மீளத்தில் இருக்கப் பிறந்தவன் பிறரிடத்தில் சினேகம் செய்து கொண்டு அவருடைய அபிப்ராயங்களைத் தெரிந்து நடப்பவன். மிருகங்களின் தோல்களைக் கொண்டு கைத் தொழில், வியாபாரம் செய்பவன்.